Sunday, 19 January 2020

கிரகம்



இந்த கிரகம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது.
மனிதன் மாறி விட்டான்
வளங்களை சுரண்டி வசதிகளை பெருக்கி கொண்டான்
நுகர்வுக்கு அடிமையாகி விட்டான்
சுய நலமிக்க பேராசை கொண்டான்
வசதிக்கு பின்னால் ஓடுகிறான்
சகமனித உணர்வுகளை நெறித்து விட்டான்
ஆம்
இந்த கிரகம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது
பணம் என்னும் பண்டத்துக்காக
கடல் கடந்து ஓடுகிறான்
தாய் தந்தையைத் தவிக்க விடுகிறான்
பச்சை அட்டை பெறுவதற்காக
மதி கெட்டு அலைகிறான்
ஆம்
இந்த கிரகம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது
இயற்கையின் வரங்களை சுரண்டுகிறான்
உலகில் நியாயங்களை அழிக்கிறான்
மனதின் மாண்பை மிதிக்கிறான்
போட்டி மனப்பான்மையால் வேகிறான்
வறட்சியை வா என்று அழைக்கிறான்
ஆம்
இந்த கிரகம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது
சுய நலத்தை சுவீகரிக்கிறான்
பேராசையை பெருக்குகிறான்
உயிரினங்களை சுரண்டுகிறான்
இரக்கத்தை அடக்கம் செய்கிறான்
மனித உணர்வுகளை மாசுபடுத்துகிறான்
கல்வியை காசுக்கு படிக்கிறான்
ஆம்
இந்த கிரகம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது
மனிதன் மிருகமாகி விட்டான்
ஹோமோ சேப்பியன்ஸ் ஆகி விட்டான்




No comments:

Post a Comment