இது கொரானா காலம்
-----------------------------------
ஆலயம் இருக்கிறது . தொழுவாரில்லை.
அய்யர் இருக்கிறார். ஆசார,அனுஷ்டானங்கள் இல்லை.
சாலைகள் இருக்கிறது. வாகனங்கள் இல்லை.
பள்ளி இருக்கிறது.மாணவர்கள் இல்லை.
தொழிற்சாலை இருக்கிறது.தொழிலாளர்கள் இல்லை.
மூன்று சக்கர வாகனங்கள் உண்டு.பயனிப்போர் இல்லை.
சுற்றுலா தளங்கள் உண்டு. பக்தர்கள் இல்லை.
கடை விரித்தேன்.கொள்வாரில்லை.
கண்ணுக்குத்தெரியாத மாயை களமாடுகையில்
எல்லையிலே ஒருவன் சீண்டுகிறான்.
லாக்கப்பில் மரணங்களுக்கு குறைவில்லை.
பருவமழை தவறாமல் வருகிறது.
இத்தனையும் இருந்தாலும்
மனிதம் இங்கே மரித்துப்போகவில்லை.
ஆம்.இதுவும் கடந்து போகும்.
காலம் வரும் வரை காத்திருப்போம்
இக்காலம் கனவென மறந்திருப்போம்
புது யுகம் நோக்கி பயணிப்போம்.
ல்ல்
நல்ல வரிகள் 👍 சார்..
ReplyDeleteநன்றி
Delete