இந்தியா என்றால்
அழகு
அழகு என்றால் இந்தியா
பெண்ணின் குழி
விழுந்த கன்னம் போல
சிவந்த அழகிய பள்ளத்தாக்குகள்
கன்னத்தில் வழியும்
நீர் போல
ஓடோடி வரும் அருவிகள்
பெண்ணின் மன கிலேசம்
போல
புகையாக வரும்
மேகங்கள்
தாயின் மடி போன்ற
மலை முகடுகள்
பெண்ணின் சிவந்த
விழிகள் போல
வீசி உமிழும் காற்றுகள்
அவளின் சிரிப்பு
போல
அமிழ்ந்திருக்கும்
பனியாறு குடாக்கள்
அவளின் வெடிச்சிரிப்பு
போல
உருகி வரும் காளான்
பாறைகள்
அவளின் எரித்து
விடும் பார்வை போல
கும்மட்ட எரிமலைகள்
அவளின் வெண் சிரிப்பு
போல
சுண்ணாம்பு பிரதேச
நிலத்தோற்றங்கள்\
அவளின் உதிர்ந்து
விடும் எண்ணம் போல
நீண்ட மணல் மேடுகள்
இந்தியா என்றால்
அழகு
அழகு என்றால் இந்தியா
No comments:
Post a Comment