தமிழ் நாடு உள்ளாட்சி தேர்தல்
________________________________
கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெறாத உள்ளாட்சி தேர்தல் கடைசியாக பல போராட்டங்களுக்கு பிறகு உச்சநீதிமன்ற உத்தரவின் படி நடைபெற்று முடிந்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என்பதற்கு உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி வழங்கி 06.12.2019 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சம்ப ந்தப்பட்ட 9 மாவட்டங்களிலும் மறுவரையறை பணிகள் முடிந்து 4 மாததிற்குள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது. திமுக தொடர்ந்த வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்[10] புதிதாக நிறுவப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களுக்கான தேர்தல் அறிவிக்கையை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் 8 டிசம்பர் 2019 அன்று வெளியிட்டது. இதனால் முந்தைய தேர்தல் அட்டவணை நீக்கி ஆணையம் உத்தரவிட்டது.
முதல் கட்டத் தேர்தல், 27 டிசம்பர் 2019
27 டிசம்பர் 2019 (வெள்ளிக் கிழமை) அன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 2546 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 4700 கிராம ஊராட்சித் தலைவர்கள், 37,830 கிராம ஊராட்சி
உறுப்பினர்கள் என மொத்தம் 45,336 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது,
இத்தேர்தலில் 2,31,890 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். முதல் கட்டத்
தேர்தலில் மொத்தம் இன்று 1.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி
பெற்றிருந்தனர்.[
இரண்டாம் கட்டத் தேர்தல் 30 டிசம்பர் 2019
இரண்டாம்
கட்டத் தேர்தல் 30 டிசம்பர் 2019 (திங்கள்கிழமை) அன்று 46 ஆயிரத்து 639
பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. அதில் 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி மன்றத் தலைவா்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள், 255 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்காளா்கள் தங்களது வாக்குகளைச் 25 ஆயிரத்து 8 வாக்குச் சாவடிகளில் செலுத்தினா்.இரண்டாம் கட்டத் தேர்தலில் 70 விழுக்காடு வாக்குகள் பதிவானது.
இந்த கட்டுரையின் நோக்கம் பெரும்பாலான படித்தவர்களுக்கே இந்த தேர்தல் எப்படி வகைப்படுத்தப்படுகிறது. கிராம ஊராட்சி,ஊராட்சி ஒன்றியம்,மாவட்ட ஊராட்சி என்றால் என்ன,? அதன் உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?அவர்களின் அதிகாரங்கள்,பணிகள் என்ன?அவர்களை உறுப்பினர்கள் எப்படி கேள்விகள் கேட்கலாம்? என்பதே.
தமிழ்நாட்டில் 500 நபர்களும் அதற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய அனைத்து
ஊர்களையும் அதன் வருவாய்க்கு ஏற்ப அருகிலிருக்கும் சில ஊர்களைச் சேர்த்து
ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில்
இருந்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த ஊராட்சிக்கு தலைவரையும் மக்களே நேரடியாகத் தேர்வு செய்கின்றனர். மன்ற
உறுப்பினர்களில் இருந்து ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தேர்வு
செய்யப்படுகின்றார். இந்த ஊராட்சிகளில் தலைவரே நிதி உட்பட அனைத்துப்
பொறுப்புகளையும் நேரடியாகக் கவனிக்கின்றார். இவருக்கு உதவியாக ஊராட்சி
எழுத்தர் பணியில் ஒருவரை அரசு நியமிக்கிறது.தமிழ்நாட்டில் மொத்தம் 12618
ஊராட்சிகள் இருக்கின்றன.
இந்த ஊராட்சி அமைப்புகள் அவை இருக்கும் பகுதிகளில்
ஒன்றிணைக்கப்பட்டு வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் எனும் அமைப்பிலும்,
இந்த ஊராட்சிகள் அனைத்தும் மாவட்ட அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு மாவட்ட
அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எனும் அமைப்பின் கீழும் செயல்படுவதாக
அமைக்கப்பட்டிருக்கிறது.
ஊராட்சி ஒன்றியம்
மாவட்டத்தில் இருக்கும் கிராமப்பகுதியின் கிராம ஊராட்சிகள் பல சேர்க்கப்பட்டு வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள்
அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றியங்கள் அளவில் இருக்கும் சில கிராமப்
பகுதிகளைக் கொண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன.
இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு ஊராட்சி ஒன்றியக்
குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி
ஒன்றியக் குழு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக் குழுத்
தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவராகவும் தேர்வு
செய்யப்படுகின்றார். ஒன்றிய ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு
நடத்தப்படும் ஒன்றிய ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டங்களில் பெரும்பான்மையான
உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி
ஒன்றிய ஆணையாளர் அந்தப் பணிகளைத் தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும்
ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். தமிழ்நாட்டில் மொத்தம் 385 ஊராட்சி
ஒன்றியங்கள் இருக்கின்றன.
மாவட்ட ஊராட்சிகள்
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சிக்
குழுக்கள் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை என்கிற அமைப்பு
அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் இருக்கும் சில கிராமப் பகுதிகளைக்
கொண்டு மாவட்ட ஊராட்சிக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த
வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு மாவட்ட ஊராட்சி மன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாவட்ட
ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒருவர் மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத்
தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாவட்ட ஊராட்சி மன்ற
உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாவட்ட ஊராட்சி மன்றக் கூட்டங்களில்
பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும்
தீர்மானங்களின்படி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்
திட்ட அதிகாரி ஆகியோர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும்
ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். தமிழ்நாட்டில் 32 மாவட்ட ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன.
கிராம ஊராட்சி மன்றத்தின் மூலம் நிறைவேற்றப்படும் பணிகள் கடமைகள்:
படிப்பகங்கள்
ஏற்படுத்துதல், வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் நிறுவுதல்
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தலும் இதன் கடமைகள்.
தெரு விளக்குகள் அமைத்தல்
சிறுபாலங்கள் கட்டுதல்
ஊர்ச்சாலைகள் அமைத்தல் ,சாலை பராமரிப்பு
குடிநீர்க் கிணறு தோண்டுதல்
கழிவு நீர்க்கால்வாய் அமைத்தல்
சிறிய பாலங்கள் கட்டுதல்
வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல்
கிராம நூலகங்களைப் பராமரித்தல்
தொகுப்பு வீடுகள் கட்டுதல்
இளைஞர்களுக்கான பொழுது போக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன ஆகும்.
வீட்டு வரி, குழாய் வரி, தொழில் வரி, சொத்து வரி போன்ற வரிகள்
வசூலிக்கப்படுகின்றன. அந்நிதியிலிருந்து பணிகளுக்குச் செலவிடப்படுகிறது.
கிராம ஊராட்சியின் வருவாய்
வீட்டுவரி,தொழில் வரி,கடைகள் மீது விதிக்கப்படும் வரி அபாரதக் கட்டணங்கள்
குடிநீர்க்குழாய் இணைப்புக் கட்டணம்
நிலவரியிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு
சொத்துரிமை மாற்றத்தின் மீதான வரியிலிருந்து ஒரு பங்கு
சொத்துரிமை மாற்றத்தின் மீதான தீர்வையில் இருந்து ஒரு பங்கும் கிராம ஊராட்சிக்கு வருவாயாக கிடைக்கிறது.
இவைகளால் வரும் வருவாய் மட்டுமே போதாது. எனவே மத்திய மாநில அரசுகள்
பல்வேறு திட்ட நிதிகளையும் ,மானியங்களையும், உதவித் தொகைகளையும் மாவட்ட ஊரக
வளர்ச்சி முகமை மூலமாக ஊராட்சிகளுக்கு வழங்குகின்றன.
மத்திய மாநில அரசுகள்வழங்கும் மானியங்கள் தான் முதன்மையானவருவாய் ஆகும்.
கிராம சபை / ஊர்மன்றக் கூட்டம்
ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபை ஊர் மன்றக் கூட்டம் அமைக்கப்பட்ள்ளது.
கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
கிராம சபை கூட்டத்திற்கு கிராம ஊராட்சி தலைவர் தலைமை வகிப்பார்.
ஊர்மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு முறை கூடுகின்றன. அந்நாட்கள்:
ஜனவரி, 26 குடியரசு நாள்மே 1,தொழிலாளர் நாள் ஆகஸ்ட் 15 இந்திய விடுதலை
நாள், அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்த நாள்.
கிராமத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல். ஆண்டு வரவு செலவுத்
திட்டங்களுக்கு ஒப்புதல், திட்டங்களின்பயனாளிகள் யார் என்பது
போன்றவற்றிற்கு ஒப்புதல் அளித்தல் ஆகியவை கிராம சபையின் பணிகள் ஆகும்.
ஊராட்சி ஒன்றியக் குழுவின் அமைப்பு
ஊராட்சி மன்றங்கள்
வாரியாக ஊராட்சி ஒன்றியத்துக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த
வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான
உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி ஒன்றியக் குழு
உறுப்பினர்களின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி
ஒன்றியக் குழு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத்
தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு
செய்யப்படுகின்றார். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு
நடத்தப்படும் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டங்களில் பெரும்பான்மையான
உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி ஒன்றிய
ஆணையாளர், அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக்
கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி
சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகம்
ஊராட்சி ஒன்றியத்தின் அன்றாட நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர்
தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்), துணை வட்டார
வளர்ச்சி அலுவலர் (இயக்குதல்), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கணக்குகள்),
பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர், சமூகக் கல்வி மற்றும் மக்கள் தொடர்பு
விரிவாக்க அலுவலர், மேலாளர், அலுவலக கண்காணிப்பாளர், கணக்காளர் மற்றும்
கிராம நல அலுவலர்களால் இயங்கும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தால் நிர்வாகிக்கப்படுகிறது.
பணிகள்
தமிழ்நாடு
பஞ்சாயத்துகள் சட்டம், ஆண்டு 1994, பிரிவு 112, பஞ்சாயத்து ஒன்றியத்தின்
கடமைகளும் பணிகளும் வரையறுத்துள்ளது. அவைகளில் சில;
பஞ்சாயத்து ஒன்றியத்தின் சாலைகள் கட்டுமானம், பராமரிப்பு & மராமத்துப் பணிகள் மேற்கொள்தல்.
குடிக்க, குளிக்க, வெளுக்க தேவையான நீர் வினியோக கட்டுமானப் பணிகள் மேற்கொள்தல்.
ஆரம்ப & நடுநிலைப் பள்ளிக்கூடங்கள் கட்டுதல் மற்றும் பராமரித்தல்
பஞ்சாயத்து ஒன்றியங்கள் எவ்வித வரியை பொதுமக்களிடமிருந்து வசூலிக்க இயலாது. எனவே வரியற்ற சில கட்டணங்கள் வசூலிக்கிறது. அவைகள்;
வணிக நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம், சந்தைக் கட்டணம், அபராதக் கட்டணம் மற்றும் வாடகை வருவாய்.
தமிழ்நாடு அரசிடமிருந்து ஒதுக்கப்பட்ட மற்றும் பகிர்வு வருவாய்
(Assigned & shared revenues): தமிழ்நாடு அரசு வசூலிக்கும் முத்திரைக்
கட்டணம் மற்றும் கேளிக்கை வரி மீதான கூடுதல் வரிகளில் (Surcharge) ஒரு
பங்கு பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு, மானியங்கள் வழங்கல் விதிகளின் படி,
மாநில அரசு நிதி வழங்குகிறது. சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்களிலிருந்து
தமிழ்நாடு அரசிற்கு வரும் வருவாயில் ஐம்பது விழுக்காட்டுத் தொகையை,
பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
மானியங்கள்
பஞ்சாயத்து ஒன்றியப் பகுதிகளில், மகப்பேறு மருத்துவ மனைகள் மற்றும்
ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கத் தேவையான நிதிக்கு, தமிழ்நாடு அரசு
மற்றும் இந்திய அரசு வழங்கும் மானியத் தொகைகளை, தமிழ்நாடு அரசின் மாநில
நிதிக் குழு (State Finance Commission) பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு
வழங்குகிறது.
செலவிடும் அதிகாரம்
பஞ்சாயத்து
ஒன்றியக் குழுவிற்கு, ஒரு பணியை நிறைவேற்ற, அதிக பட்சமாக ரூபாய் பத்து
இலட்சம் வரை ஒன்றியத்தின் பொது நிதியிலிருந்து செலவு செய்து கொள்ள அதிகாரம்
உள்ளது. இதற்கு மேலிட அனுமதி தேவையில்லை.
ரூபாய் பத்து இலட்சம் முதல் 50 இலட்சம் முடிய செலவினங்களுக்கு,
மாவட்ட ஆட்சியரியன் அனுமதியும், 50 இலட்சத்திற்கு மேற்பட்ட செலவினங்களுக்கு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (Rural development and Panchayatraj Department) இயக்குனரின் அனுமதி தேவை.
இருப்பினும் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் திட்ட ஒதுக்கீடு நிதிகளை
செலவிட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டும்.
மாவட்ட ஊராட்சி, சென்னை மாவட்டம் தவிர்த்த ஓவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட ஊராட்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 50,000 மக்கள்தொகைக்கு
ஒருவர் என்ற அடிப்படையில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள்
வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மாவட்ட ஊராட்சியின்
தலைவர் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதாவது
உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்ககிறார்கள்.
இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
மாவட்ட ஊராட்சியின் கடமைகள்:
மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் செயல்படுத்தும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், சாலை மேம்பாடு குறித்தும் அரசுக்கு ஆலோசனை வழங்குவது இதன் கடமையாகும்.
மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல் போன்றவையும் இதன் கடமைகள் ஆகும்.
மாவட்டத் திட்டக்குழு
இதன் தலைவர் மாவட்ட ஊராட்சி தலைவர் ஆவார்.
மாவட்டம் முழுவதற்கும் ஒரு வரைவு வளர்ச்சித் திட்டத்தை தயாரிப்பது இதன் பணி ஆகும்.
இதன் உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.
அம்மாவட்டத்தில் உள்ள மக்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மாவட்ட முழுமைக்குமான வளர்ச்சித்திட்டம் தயாரித்து மாநிலத் திட்டக்குழுவிற்கு அனுப்பி வைப்பது மாவட்டத் திட்டக்குழுவின் கடமை ஆகும்.
மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடைபெற வேண்டும். மேலும் ஒன்பது மாவட்டங்களில் கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டும்.
கிராம வார்டு உறுப்பினர்களுக்கும், கிராம ஊராட்சி தலைவருக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்கள் ஒதுக்கப்படாது.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் அரசியல் கட்சிகளின் சின்னங்களில் போட்டி இட வேண்டும் என்கிறது தேர்தல் ஆணைய விதி.
தவறு செய்பவர்களை கேள்வி கேட்க முடியுமா? முடியும். இதை அடுத்த பதிவில் பார்ப்போம் .
உதவி: தமிழ் விக்கிபீடியா கலைக்களஞ்சியம்.